Header Ads Widget

கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: 36 நாள்களுக்குப் பிறகு ரூ.3 லட்சம் கொடுத்து மீட்கப்பட்ட பெண்!

ஹரியானா மாநிலம், நூஹ் பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் ஜூலை மாதம் 27-ம் தேதி மாடுகளுக்கு தீவனம் சேகரிக்க வயலுக்குச் சென்றிருக்கிறார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் காரில்வந்து வழி கேட்பது போல பேசியிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்தபின்னர் துப்பாக்கியைக் காண்பித்து அந்தப் பெண்ணை காரில் கடத்திச் சென்றிருக்கிறார்கள்.

பாலியல் வன்கொடுமை

அந்தப் பெண்ணை ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்று ஒரு வீட்டின் அறையில் அடைத்திருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்திருக்கிறார்கள்.

மேலும், மூன்று பேரும் அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டாரை தொடர்பு கொண்டு நிர்வாண வீடியோவை வெளியில் கசியவிடாமல் இருக்க ரூ.3 லட்சம் கேட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தாரும் ரூ.3 லட்சம் கொடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை 36 நாள்களுக்குப் பிறகு செப்டம்பர் 1-ம் தேதி மீட்டிருக்கிறார்கள்.

காவல்துறை

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய போலீஸார், ``பெண்ணின் புகாரின் அடிப்படையில், இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டு, உண்மைகளை நாங்கள் சரிபார்த்து வருகிறோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்