Header Ads Widget

``பயங்கரவாதத்தின் முக்கிய இடமாகக் கேரளா மாறிவிட்டது" - பினராயி விஜயன் அரசு மீது ஜே.பி.நட்டா தாக்கு

தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த வாரம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர், கேரளாவில் கண்டன போராட்டங்களும், கடையடைப்பு போராட்டங்களும் நடத்தினர்.

பினராயி விஜயன்

இதில் அரசுக்கு சொந்தமான பொருள்கள் சேதமடைய, கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இதனைக் கண்டித்தது.

இத்தகைய பரபரப்புக்கு மத்தியில், பயங்கரவாதத்தின் முக்கிய இடமாகக் கேரளா மாறிவிட்டது என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

ஜே.பி. நட்டா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய நட்டா, ``கேரளா தற்போது தீவிரவாதத்தின் முக்கிய இடமாக மாறிவிட்டது. வாழ்க்கை என்பது இங்குப் பாதுகாப்பாக இல்லை. மேலும் சாதாரண குடிமக்கள், தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. வகுப்புவாத பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமல்லாமல், வன்முறையை உருவாக்குபவர்கள் மற்றும் அதனை ஊக்குவிப்பவர்களுக்கு, இந்த இடதுசாரி அரசாங்கத்தின் மறைமுக ஆதரவு இருக்கிறது" எனக் கூறினார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/ILW0Nl6
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்