தி.மு.க ராஜ்யசபா எம்.பியாகவும், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராகவும் இருக்கும் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் 'எந்த மாவட்டச் செயலாளரும் கட்சிக்காரங்களை மணல் அள்ளுங்கனு சொன்னதில்லை. நான் மட்டும்தான் சொல்கிறேன்' என்று பேசியதயாக வெளியாகியிருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. இதற்கு பலதரப்பிலிருந்தும் விமர்சனங்களும், கண்டனமும் வலுத்துவருகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-09/4895f08e-5272-4198-a924-4019afde4b49/k_r_n_rajeskumar.jpg)
இது தொடர்பாக, கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்களே, நதியைச் சூறையாடும் அவலத்துக்குத் துணைபோவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மணல் கடத்தும் உரிமை ஏகபோகமாக ஆளுங்கட்சியினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தையும் இச்சம்பவம் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. இயற்கை வளங்களைப் பாதுகாக்க, சட்டவிரோதமாக மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முறையாக டெண்டர் விடப்பட்டு, குறிப்பிட்ட அளவுக்குத்தான் மணல் அள்ள அனுமதிக்கப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-03/7e6aa5ef-3c76-4cec-a107-230981de585d/62350e1ec1e30.jpg)
இச்சூழலில், மணல் அள்ள கட்சிக்காரர்களுக்கு அனுமதி வழங்கியதாக தி.மு.க எம்.பி. பேசியது யார் கொடுத்த தைரியத்தில்? எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பதுடன், மணல் கொள்ளையை முற்றிலும் தடுத்து நிறுத்தி, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
from Latest News
0 கருத்துகள்