Header Ads Widget

அனைத்து பெண்களுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு ! - உச்சநீதிமன்றம்

மருத்துவ ரீதியாக கருக்கலைப்பு செய்யும் வழக்கில் ஒரு முக்கிய கருத்தை உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால் அதை மருத்துவ முறையில் செய்ய உரிமை உண்டு என்றுள்ளது உச்ச நீதிமன்றம்.

திபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், பெண் கருக்கலைப்பு பற்றி மேலும் கூறியது , ‘’ ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தால் அதை மருத்துவ முறையில் செய்ய உரிமை உண்டு. கருக்கலைப்பு சட்டவிரோதமாகாது. இந்த உரிமையை மருத்துவக் கருவுறுதல் சட்டம் 1971(MTP) அனுமதிக்கிறது. திருமணமான பெண்கள் அல்லது திருமணமாகப் பெண்கள் என்ற பாகுபாடு இல்லை. அனைத்து பெண்களுக்கும், எந்த சூழ்நிலையிலும் மருத்துவ முறையில் பாதுகாப்பாகக் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உண்டு கூறியுள்ளது.

மேலும், ‘சமயங்களில் திருமண உறவுகளில் வலுக்கட்டாயமாகப் பெண்கள் உடலுறவுக்கு ஆளாக்கப்பட்டு கர்ப்பம் தரிக்கிறார்கள். வலுக்கட்டாயமாகக் கருத்தரித்த பெண்களை அதிலிருந்து காப்பாற்ற இந்த சட்டம் அனுமதிக்கிறது. எனவே பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பிழைத்து வரும் பெண்களைப் போலவே திருமணமாகி வலுக்கட்டாயமாகக் கர்ப்பம் தரிக்கப்பட்ட பெண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்ய சட்டப்பூர்வ உரிமை உண்டு’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்