தீபாவளி என்று சொல்லும்போதே புத்தாடைகள், இனிப்புகள் புதிய படங்கள் ஆகியவை தான் நினைவிற்கு வரும். அதே சமயம் இதற்கெல்லாம் ஒருபடி மேலாக முதலில் நினைவு வருவது பட்டாசுகள் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் இன்று பட்டாசுகள் வந்துவிட்டது.
தற்போது தீபாவளி நெருங்கி வருகிறது. மக்கள் அதற்கான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிய வகை பட்டாசுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளது. அவற்றை பார்ப்போம்.
மேஜிக் பீகாக் (magic peacock).
இது வெடிக்கும் போது சத்தம் வராது. பெயருக்கு ஏற்ப மயில் தோகை போல் விரிந்து தீப்பொறிகள் வரும்.
டிரோன் ஃப்ளையிங் ( drone flying)
இந்த டிரோன் பட்டாசு டிரோன் கேமராவைப் போல மேலே செல்லும் . குறிப்பிட்ட தூரத்தில் விரிந்து பறக்கும்.
கூல்டிரிங்க்ஸ் கலசம்
பெயரே வித்தியாசமாக உள்ள இந்த வெடி பார்பதற்கு அப்படியே குளிர்பான கேன்களைப் போலவே இருக்கும்.
வழக்கமாக குளிர்பானத்தை திறப்பதைப் போலவே இதனையும் திறந்து அதனுள் நெருப்பு வைத்தால் கலசத்தை போல் தீப்பொறிகள் வரும்.
பர்த்டே பட்டாசு
பிறந்த நாள் கேக்கைப் போன்று வடிவமைக்கப்பட்ட இந்த வெடி வெடிக்காமல் மேலே சென்று சத்தமிடும்.
ஹெலிகாப்டர் பட்டாசு
ஹெலிகாப்டர் மாதிரி மேலே சென்று சில விநாடிகள் வட்டமிடும்.
காயின் (coin) வெடி
நாணயங்களை போலவே உள்ள இந்த வெடி பல வண்ணங்களில் உள்ளது. நெருப்பு வைத்தவுடன் அதன் வண்ணத்துக்கு ஏற்ப புகை சத்தத்துடன் வெளி வரும்.
வீல் (wheel) வெடி
வாகன சக்கரம் போல சில வினாடிகள் உருண்டு சென்று சத்தமிடும்.
கடந்த 2 ஆண்டு தீபாவளித் திருநாளும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளோடு கொண்டாடப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் நீங்கினாலும் அரசு சில விதிமுறைகளை வழங்கியுள்ளது, அந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றுவோம். பாதுகாப்போடு வெடிகளை வாங்கி பயன்படுத்துவோம். இனிய தீபாவளி வாழ்த்துகள்.
from Latest News

0 கருத்துகள்