Header Ads Widget

கோவை: சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான கார்! - உடல் கருகி ஒருவர் பலி... போலீஸ் விசாரணை

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக நின்றிருந்த மாருதி கார், இன்று அதிகாலை திடீரென வெடித்து சிதறியது.

இந்தச் சம்பவத்தில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்ட பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புயினர், காவல்துறையினர் அப்பகுதிக்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்ட விசாரணையில் காரில் பொருத்தப்பட்டிருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியிருப்பது தெரியவந்தது.

காரில் இருந்தவரின் உடல் முழுவதும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கிறது. காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால், அந்த முகவரி குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தை அடுத்து கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதிக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்புப்பிரிவு போலீஸாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

car
போலீஸ்

இது தொடர்பாக, ``சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகில் நடந்திருப்பதால் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்