திருமணத்திற்கு முன்பு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் (pre wedding photo shoot) தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகின்றன. வித்தியாசமான முறையில் தங்களின் புகைப்படங்கள் இருக்க வேண்டும் என இதற்காக நிறைய மெனக்கெடல்களை மேற்கொள்கின்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-11/1c92d924-eef3-4463-9a42-917f085e0db6/wedding_pixabay.jpg)
`இன்னும் ஆரம்பிக்கவே இல்லை, அதுக்குள்ள அலப்பறை’ என்பது போல், சில புகைப்பட ஷூட்டுகள் சிக்கலில் முடிந்த சம்பவங்களும் உண்டு.
இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது, திருமண ஜோடி ஒன்றின் ப்ரீ வெடிங் வீடியோ ஷூட்.
இணையத்தில் பதிவிடப்பட்ட அந்த வீடியோவில், ஜோடிகள் திருமண உடையில் பைக்கில் அமர்ந்திருக்க, அவர்கள் முன் கல்லும், காரும் இருக்கிறது. கிரேன் மூலமாகக் கட்டப்பட்ட அந்த வண்டி அப்படியே தூக்கப்படுகிறது. கிரேன் அப்படியே அல்லேக்காக தூக்க, வண்டியை வேகமாக முறுக்கி தங்களின் முன்பிருந்த காரை அப்படியே வண்டியிலிருந்தபடியே கடந்து விடுகிறார்கள்.
அதாவது கல்லில் இடறி அப்படியே காரை தாண்டி அந்த வண்டி இறங்குவது போலப் படமெடுக்கிறார்கள். இந்த வீடியோ பலரையும் வெகுவாக கவர, நெட்டிசன்கள் கமென்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
pre-wedding shoots - i’m getting this pic.twitter.com/Ynwf7Kxr6a
— Best of the Best (@bestofallll) October 27, 2022
சிலர் `தூம் 4' திரைப்படம் என்றும், சிலர் `என்னுடைய திருமண ப்ரீ வெடிங் வீடியோவும் இப்படிதான் இருக்க வேண்டும், இல்லையெனில் திருமணமே வேண்டாம்' என்றும் கூறி வருகின்றனர். சிலர் பாராட்டுகிறார்களா அல்லது கலாய்க்கிறார்களா என்பது தெரியாதது போலவும் கமென்டுகளை பதிவிடுகின்றனர்.
எதுக்கு வம்பு? நாம ஓரமா நின்னு, கிரேனை வேடிக்கை பார்ப்போம்..!
from Latest News
0 கருத்துகள்