இந்தியா மட்டுமல்லாமல் மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு மக்களின் உள்ளம் கவர்ந்த மதிப்புமிகு பிராண்டாக ஹிமாலயா நிறுவனம் இன்று உயர்ந்துள்ளது.
அன்றாட வாழ்வில், மக்கள் பயன்படுத்தும் அழகுப் பொருள்கள், மருந்து மாத்திரைகள், சிரப்கள் என்று ஏராளமான தயாரிப்புகளை ஹிமாலயா வெல்னெஸ் கம்பெனியில் வழங்கி வருகிறோம். அந்த வரிசையில், இந்த முறை சருமத்தை பாதுகாக்கும் ஒரு மிகச்சிறந்த தயாரிப்பான 'ஹிமாலயா சாண்டல் குளோ சோப்'பை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளோம்.
‘சந்தனாதி ரோபனா தைலம்’ கொண்டு தயாரிக்கப்பட்ட சோப்!
ஹிமாலயா ஆயுர்வேத சாண்டல் குளோ சோப், பிரத்யேகமாக சந்தனாதி ரோபனா தைலத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சந்தனாதி ரோபனா தைலம் ஆயுர்வேத வைத்தியத்தில் பெரும் பாரம்பரிய சிறப்பைக் கொண்டது.
தூய சந்தனத்தில் இருந்து எடுக்கப்படும் ஆயுர்வேத எண்ணெயைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் இந்த சோப், நீடித்த நறுமணத்தை தருவதோடு, சருமத்தையம் பட்டு போல் மென்மையாக பாதுகாக்கிறது. மேலும், இந்த தனித்துவமான சோப் சருமத்தை நன்கு சுத்தமாக்கி, சருமத்துக்குரிய முக்கிய சத்துக்களை தந்து ஊட்டமளிக்கிறது. இதனால், ஆரோக்கியமான, இயற்கையான வழியில் ஆயுர்வேதத்தின் முழு மகிமை கிடைத்து, தேகம் புத்துணர்ச்சி அடைகிறது.
ஆயுர்வேதத்தில் ஆராய்ச்சி!
3000 வருட இந்திய மருத்துவ பாரம்பரியம் கொண்டது ஆயுர்வேதம். அதன் புகழ் இன்று எல்லைகளை கடந்து எங்கெங்கிலும் பரவியுள்ளது. நம்முடைய இமய மலையில் தோன்றிய இந்த மகத்துவமான மருத்துவ பாரம்பரியத்தைப் போற்றி, அதில் மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் பலநூறு ஆராய்ச்சியாளர்களை பணியமர்த்தி, சிறப்பான ஹெல்த்கேர் தயாரிப்புகளையும், சேவைகளையும் ஹிமாலயா வெல்னெஸ் கம்பெனியில் வழங்கி வருகிறோம்.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒவ்வொரு முறையும் சிறந்ததை மட்டுமே தேர்ந்தெடுங்கள்!
from Latest News

0 கருத்துகள்