Header Ads Widget

``கோயில் உள்விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு உரிமை இல்லை!" - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஶ்ரீசடகோப ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை அறநிலையத்துறை மீட்டு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், சில அதிகாரிகள் செய்யும் தவறால் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வழிபாட்டுமுறை குறித்து ராமானுஜர் வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளார். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழிமுறைகளை மாற்றி செயல்பட்டு வருகின்றனர். ஆச்சாரியா சம்பிரதாயம் உள்ள கோயில்களில் மரபு மீறப்பட்டு வருகிறது. கோயில் உள்விவகாரங்களில் தலையிட அறநிலையத்துறைக்கு உரிமை இல்லை.

ஆனால் ஆகம விதிகளை மீறி கோயில் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயிலில் அதிகாரியாக இருந்த ஜெயராம் என்பவர் விதிமுறைகளை மாற்றி அமைத்து உத்தரவினை பிறப்பித்துள்ளார். இவ்வாறு மரபுகளை மீறி, தன்னிச்சையாக செயல்பட்டு வரும் அதிகாரியை பணியிட நீக்கம் செய்ய வேண்டும். கோயில் உள்விவகாரங்களில் தலையிடும் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளை கண்டித்து சென்னையில் வரும் நவம்பர் 11-ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" எனக்கூறினார்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்