குடிபோதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாது. பெரும்பாலான படங்களில் குடிபோதையில் பாம்பை எடுத்து கழுத்தில் கட்டிக்கொண்டது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். அது போன்ற ஒரு உண்மை சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் கார்வா அருகில் உள்ள கிதசோட் என்ற கிராமத்தை சேர்ந்தவர் பிர்ஜலால் ராம். குடிகாரரான ராம் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபடுவதுண்டு. வழக்கம் போல் ராம் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வழியில் பாம்பு ஒன்று சென்று கொண்டிருந்தது. குடிபோதையில் அதனை பிடித்து ராம் தனது கழுத்தில் சுற்றிக்கொண்டார்.

அமருவதற்கு நல்ல இடம் கிடைத்த மகிழ்ச்சியில் பாம்பு ராம் கழுத்தை நான்றாக சுற்றிக்கொண்டது. பின்னர், ராம் பாம்பை கழுத்தில் இருந்து எடுக்க முயன்றார். ஆனால் அவரால் எடுக்க முடியவில்லை. பாம்பு கடித்துவிடும் என்ற அச்சத்தில் அவருக்கு அருகில் மற்றவர்கள் செல்ல பயந்தனர். யாருமே அவருக்கு உதவி செய்ய அருகில் வரவில்லை. இறுதியில் ராம் மகனும் அவரின் நண்பரும் சேர்ந்து ராம் கழுத்தில் இருந்த பாம்பை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். பாம்பு நன்றாக கழுத்தை பிடித்துக்கொண்டதால் அதனை அப்புறப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. ஆனாலும் மிகவும் போராடி பாம்பை ராம் கழுத்தில் இருந்து அவரது மகன் அப்புறப்படுத்தினார். எனினும் நல்வாய்ப்பாக பாம்பு ராமை கடிக்கவில்லை. அது விஷமுள்ள பாம்பா என்று தெரியவில்லை. பாம்பை ராம் கழுத்திலிருந்து அப்புறப்படுத்திய போது ராம் லேசான காயம் அடைந்தார். ராம் கழுத்தில் பாம்போடு போராடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியிருக்கிறது.
#Watch: झारखंड के गढ़वा में अजगर को गले में माला की तरह लटकाने की कोशिश एक शख्स को भारी पड़ गई। अजगर ने शख्स की गर्दन को बुरी तरह जकड़ लिया।#Jharkhand #Python #Viralvideo pic.twitter.com/5qdtFpJZnY
— Hindustan (@Live_Hindustan) November 10, 2022
from Latest News

0 கருத்துகள்