கொரோனா தொற்றின்போது, மக்கள் பலரும் தங்களின் வீடுகளில் இருந்தே வேலை செய்ய ஆரம்பித்தனர். தொற்றின் தீவிரம் குறைந்த பின்னும் பல அலுவலகங்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி தங்கள் ஊழியர்களை வலியுறுத்தின. சிலர் தாமாக முன்வந்து வீடுகளிலேயே தங்கி வேலை செய்வதாகக் கூறினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-12/085fae3d-465d-4b71-8370-9d5d96d1d457/work_from_home_getty.jpg)
இப்படி வீடுகளில் வேலை செய்யும் நபர்கள் எப்போதும் லேப்டாப்பும் கையுமாகவே சுற்றித் திரிய ஆரம்பித்தனர். `ஆபீஸ் போனா கூட இவ்ளோ வேலை பார்க்க மாட்டேன்; வீட்ல இருந்து எவ்ளோ வேலை பார்க்குறேன்’ என, சிலர் தீயாக அலுவலக வேலைகளையும், கூடவே வீட்டு வேலைகளையும் சமாளிக்க ஆரம்பித்தனர்.
இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய், கொல்கத்தாவில் மணமகன் ஒருவர், தனது திருமணத்தின்போது, இரு பூசாரிகள் மந்திரம் ஓதிக் கொண்டிருக்க, வேட்டி, பனியன் அணிந்து கொண்டு மடியில் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
சடங்குகள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் இவர் வேலை செய்து கொண்டிருக்கும் இந்தப் புகைப்படத்தை `கல்கத்தா இன்ஸ்டாகிராமர்ஸ்' என்ற பக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ``வொர்க் ஃபர்ம் ஹோம் அடுத்த கட்டத்திற்கு நீடிக்கும் போது,.. எனக் குறிப்பிட்டு, திருமணத்தின்போது இப்படிச் செய்து கொண்டிருப்பதைப் பார்க்க வேண்டும் என நீங்கள் நினைக்கும் நண்பர்களை டேக் செய்யுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளது.
வைரலான இப்பதிவிற்கு காமெடி எமோஜிகளை பலரும் தெறிக்கவிட்டாலும், வொர்க் ஃபர்ம் ஹோமின் சங்கடங்களைச் சிலர் சாடியும் வருகின்றனர்.
from Latest News
0 கருத்துகள்