Header Ads Widget

மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நடிகர் ஷாருக் கான்! - என்ன காரணம்?

நடிகர் ஷாருக் கான் ஷார்ஜாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு தனி விமானத்தில் மும்பை திரும்பினார். அவருடன் அவர் செயலாளர் பூஜா, பாதுகாவலர்களும் சென்றிருந்தனர். விமான நிலையத்தில் அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது, அவற்றில் பல விலைமதிப்புமிக்க கடிகாரங்கள் இருந்தன. இது தவிர ஒரு ஆப்பிள் கடிகாரமும் இருந்தது. அதற்கு சுங்கவரிக் கட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து ஷாருக் கானும், அவருடன் வந்தவர்களும் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டனர். அவை அனைத்தும் `கிஃப்டாக கிடைத்தவை' என்று ஷாருக் கான் தரப்பில் குறிப்பிடப்பட்டது. கிஃப்டாக கிடைத்தப் பொருள்களுக்கு பில் இருக்காது என்பதால் ஒவ்வொரு பொருளுக்கும் என்ன விலை என்பதை இன்டர்நெட்டில் பார்த்து அதன் பிறகு அதற்கு அதிகாரிகள் மதிப்பீடு செய்தனர்.

ஷாருக் கான்

அவற்றின் மொத்த மதிப்பு ரூ.17.86 லட்சமாகும். வி சிங் என்ற ஷாருக் கான் பாதுகாவலர் கொண்டு வந்த பேக்கில்தான் அவை இருந்தன. தீவிர விசாரணைக்குப் பிறகு ஷாருக் கானும், அவர் செயலாளர் பூஜாவும் விடுவிக்கப்பட்டனர். பாதுகாவலர் ரவி சிங் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டார். பணம் கட்டும் கவுன்ட்டரில் சிக்கல் ஏற்பட்டதால் உடனே பணத்தைக் கட்ட முடியவில்லை. ரவி சிங் அதிகாலை வரை நின்று கடிகாரங்களுக்குத் தேவையான சுங்க வரி ரூ.6.83 லட்சத்தை ஷாருக் கான் தரப்பில் கட்டினார். அதன் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்படும் பொருள்களின் மதிப்பில் 38.5 சதவிகிதம் சுங்க வரியாக வசூலிக்கப்பட்டது. ஷாருக் கான் ஷார்ஜாவில் நடந்த புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டபோது அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. ஷாருக் கான் வெளிநாட்டிலிருந்து வரும்போது பிடிபடுவது இது முதன்முறை கிடையாது. 2011-ம் ஆண்டும் வெளிநாட்டிலிருந்து வரும்போது 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களைக் கொண்டு வந்து பிடிபட்டார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/3Au9iNg
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்