Header Ads Widget

ரூ.1 கூடுதலாக வசூலித்த நடத்துநர்; நீதிமன்றம் சென்ற பயணி - போக்குவரத்து கழகத்துக்கு ரூ.30,000 அபராதம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர், கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி, 3 -ம் தேதி, அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட பேருந்தில் திருச்செங்கோட்டில் இருந்து ஈரோட்டுக்கு சென்றார். அப்போது, அந்த பேருந்து நடத்துநர் பேருந்து கட்டணமான ரூ. 7 - க்கு பதிலாக, ரூ. 8 யை வசூல் செய்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த நடத்துநரிடம் பாலசுப்ரமணியம் காரணம் கேட்டும், முறையான பதில் சொல்லவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமான அவர், அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நாமக்கல் பயனீட்டாளர் சங்கத்தின் மூலம், நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, விசாரணை நடத்திய நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

திருச்செங்கோடு

அதில், தமிழக அரசு போக்குவரத்து கழக துணை மேலாளரும், நடத்துநரும் சேர்ந்து, திருச்செங்கோடு - ஈரோடு இடையே சரியான தூரத்தை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில், கட்டணம் நிர்ணயம் செய்து வசூல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை, 2 மாதத்துக்குள் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தவறும் நிலையில் இருவரும் ரூ. 10 லட்சம் அபராதத்தை தமிழ்நாடு நுகர்வோர் நலநிதிக்கு செலுத்த வேண்டும். அதோடு, நடத்துநர், துணை மேலாளர் வட்டார போக்குவரத்து கழகம் (சேலம் மேற்கு), திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோர் இணைந்து, ரூ. 30,000 அபராதம், முறையீட்டாளரிடம் கூடுதலாக வசூலித்த ரூ. 1 யையும் திரும்ப செலுத்த வேண்டும். நேர்மையற்ற வணிகமுறையை கடைபிடித்ததற்கும், சேவை குறைபாடு மற்றும் மனஉளைச்சலுக்கும் இழப்பீடாக முறையீட்டாளருக்கு ரூ. 25,000, வழக்கு செலவாக ரூ.5,000 என ரூ.30,000 அபராதத்தையும், அடுத்த இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்