கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான இவர் கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.
சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் 'Golden foot' விருதை மட்டும் 5 முறை வென்றுள்ளார். சர்வதேச கால்பந்து அரங்கில் 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையெல்லாம் படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது நடைபெற்று முடிந்த FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கால்யிறுதிப் போட்டியில் தோற்றதால் அவரது உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-12/4a1f7c2a-5476-4dd0-8a05-bad0357dfaed/SOCCER_WORLDCUP_MAR_POR_REPORT_915_1671616736259_1671616736259_1671616883265_1671616883265.jpg)
இதனிடையே மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் வெளியேற்றப்பட்டார். தற்போது அவர் புதிய கிளப் அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அவரது மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரைப் கிறிஸ்துமஸ் பரிசாக வழங்கியுள்ளார்.
வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த புதிய ரோல்ஸ் ராய்ஸ் காரை பார்த்த ரொனால்டோ ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார். இது மட்டுமின்றி குழந்தைகளுக்கும் பல்வேறு பரிசுப்பொருட்களை அவர் வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக வழங்கிய மனைவிக்கு 'Thank you My Love' என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ சமூகவலைத்தளத்தில் தனது நன்றியை தெரிவித்துள்ளார். ரொனால்டோவிற்கு அவரது மனைவி பரிசாக வழங்கிய அந்த ரோஸ் ராய்ஸ் காரின் இந்திய மதிப்பு 2. 50 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
from Latest News
0 கருத்துகள்