Header Ads Widget

எல்லை விவகாரம்: பாஜக குறித்த காங்கிரஸ் தலைவரின் பேச்சு! - விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

டிசம்பர் 9-ம் தேதியன்று அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் விவகாரம் பெரும் பேசுபொருளானது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் பல கோரிக்கை விடுத்தும் விவாதம் நடத்தப்படவில்லை.

இந்தியா - சீனா ராணுவ மோதல்

இதற்கிடையில் காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா-சீனா விவகாரத்தில் பா.ஜ.க சிங்கம் போல பேசுவதாகவும், எலி போல செயல்படுவதாகும் விமர்சித்திருந்தார். இதற்கு பா.ஜ.க தரப்பிலிருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

விகடன் கருத்துக்கணிப்பு

அதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக கார்கே பேசியது குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், கார்கே பேசியது முற்றிலும் தவறு, உண்மை மற்றும் கருத்து இல்லை என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.

விகடன் கருத்துக்கணிப்பு முடிவுகள்

இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில், அதிகபட்சமாக 66 சதவிகிதம் பேர் `கார்கே பேசியது உண்மை' என்பதைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். மற்றபடி 29 சதவிகிதம் பேர் அது `தவறு' என்றும், 5 சதவிகிதம் பேர் `கருத்து இல்லை' என்பதையும் தேர்வு செய்தனர்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்