Header Ads Widget

`துடிப்பா வேலை செய்யணும்': ஒரே வாரத்தில் 9 கிலோ எடையைக் குறைத்த மகாராஷ்டிரா எம்எல்ஏ!

மகாராஷ்டிரா மாநிலத்தில், எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சஹாஜிபாபு பாட்டீல் (Shahajibapu Patil). ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்தவரான சஹாஜிபாபு பாட்டீல் அதிக உடல் எடையுடன் காணப்பட்டார்.

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் குளிர்காலக்கூட்டத்தொடர் தொடங்கிய போது ஓரிரு நாள்கள் மட்டும் அதில் கலந்து கொண்டார். அதன் பிறகு அவரை காணவில்லை. திடீரென உடல் எடையை குறைத்துக்கொண்டு ஸ்மார்டாக வந்து நிற்கிறார். அவர் உடல் எடையை குறைப்பதற்காக பெங்களூருவில் உள்ள ஒரு ஆஸ்ரமத்திற்கு சென்றதாக தெரிவித்திருக்கிறார். அங்கு ஒரு வாரம் தங்கி இருந்து பஞ்சகர்மா செய்து தன்னுடைய உடல் எடையை குறைத்துக்கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

கீரைகள்

இது குறித்து சஹாஜிபாபு பாட்டீல் கூறுகையில், ``வயதாகிக்கொண்டே செல்வதால் உடலை மிகவும் ஃபிட்டாக வைத்துக்கொள்வது அவசியம் . நான் துடிப்புடன் வேலை செய்ய எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்வதும் அவசியமாகும். நான் ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் ஆஸ்ரமத்தில் பஞ்சகர்மா, சுதர்ஷன் கிரியா செய்து 9 கிலோ அளவுக்கு உடையை குறைத்திருக்கிறேன். இப்போது நான் உடல் தகுதியோடு இருக்கிறேன். பெங்களூருவில் உள்ள ஆஸ்ரமத்தில் தினமும் சுதர்ஷன கிரியா, பஞ்சகர்மா செய்வதற்காக காலை 5 மணிக்கு எழுந்து விடுவேன். தினமும் 2 மணி நேரம் யோகா செய்வேன். இலை காய்கறிகளையும், பருப்பு வகைகளையும் சாப்பாடாக எடுத்துக்கொண்டேன். பிற்பகலில் உடற்பயிற்சியும், மாலையில் தியானமும் செய்தேன். இதனால் ஒரே வாரத்தில் எனது உடல் எடை 9 கிலோ குறைந்துவிட்டது'' என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன் தொகுதி எம்.பி. அனில் என்பவர் தன்னுடைய தொகுதிக்கு மேம்பாட்டு நிதி வாங்குவதற்காக உடல் எடையை குறைத்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடல் எடையை குறைத்தால், தொகுதிக்கு நிதி ஒதுக்குவதாக தெரிவித்தார். அதனை சவாலாக ஏற்று அனில் தன்னுடைய உடல் எடையை குறைத்துக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்