பாகிஸ்தானின் கராச்சியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியான வஜிரிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்தப் பகுதியில் இருந்த மருத்துவர் ஒருவரை விரும்பி, வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டார். இதை எதிர்த்து பெண்ணின் குடும்பத்தார் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், பெண்ணுடைய விருப்பத்தின் அடிப்படையில் திருமணம் நடந்ததா? அல்லது விருப்பம் இல்லாமல் திருமணம் நடந்ததா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நீதிமன்றத்தில், புதுமணப் பெண் நேற்று வாக்குமூலம் அளிக்க வந்திருந்தார். அப்போது, நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்த அப்பெண்ணின் தந்தை, தன் மகளை துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே புதுமணப் பெண் பலியானார். இதில், ஒரு காவல் அதிகரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் குற்றவாளியை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பாக பேசிய பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் (HRCP), "கடந்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 650 ஆணவக் கொலைகள் நடக்கிறது. பெரும்பாலான கொலைகள் போதுமான கவனம் பெறாமல் இருப்பதால், உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் எனக் கருதுகிறோம். இந்தக் கொலைகளுக்கு பின்னனியில், தந்தை, சகோதரர் அல்லது வேறு ஆண் உறவினர் என யாரோ ஒருவர் இயங்குகின்றனர்" எனத் தெவித்திருக்கிறது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
from Latest News

0 கருத்துகள்