Header Ads Widget

திருப்பூர்: தன்பாலின உறவு; உடன் இருந்தவரைக் கொலை செய்துவிட்டு, இளைஞர் தற்கொலை... போலீஸார் விசாரணை!

தன்பாலின உறவிலிருந்த இளைஞர்களிடையே ஏற்பட்ட தகராறில் உடன் இருந்தவரைக் கொலை செய்துவிட்டு, இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியின் அறையிலிருந்து கடந்த 7-ம் தேதி துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, விடுதி நிர்வாகத்தினர் அறையைத் திறந்து பார்த்தபோது, இளைஞர் ஒருவர் சடலமாக உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பூர் தெற்கு காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இளைஞர் கழுத்தில் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், திருப்பூர் கருவம் பாளையம் புளியமரத்தோட்டத்தைச் சேர்ந்த வினோத்குமார் (26) என்பதும், அவருடன் அறையிலிருந்த மற்றொரு இளைஞர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கதிரேசன் (26) என்பதும் தெரியவந்தது.

தன்பாலின உறவு

கல்லூரி கால நண்பர்களான இருவரும், கல்லூரியில் படிக்கும்போதிருந்தே தன்பாலின உறவிலிருந்திருக்கின்றனர். இந்த நிலையில், திருப்பூர் விடுதியில் கடந்த 4-ம் தேதி அறை எடுத்துத் தங்கியிருந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில், ஆத்திரமடைந்த கதிரேசன், வினோத்குமாரைக் கொலை செய்துவிட்டு கரூருக்குத் திரும்பியிருக்கிறார். அங்கு, போலீஸ் விசாரணைக்குப் பயந்து கடந்த 7-ம் தேதி தற்கொலை செய்திருக்கிறார். இது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்