பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற ஓர் ஆவணப்படத்தை பிபிசி வெளியிட்டிருந்தது. 2002-ல் நடந்த குஜராத் கலவரம், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களைக் குறிப்பிட்டு, இரண்டு பாகங்களாக இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடைவிதித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மாணவ அமைப்புகள் போராட்டத்தை நடத்தின. இதேபோல, பொதுவெளியில் இந்த ஆவணப்படத்தைத் திரையிட முயற்சியும் செய்துவருகின்றன.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-01/921f86a8-fd9b-447f-8865-0335ba321e01/WhatsApp_Image_2023_01_26_at_14_50_57.jpeg)
இந்த நிலையில், கேரள காங்கிரஸ் பிரிவு நேற்று இந்த ஆவணப்படத்தை திருவனந்தபுரத்தில் திரையிட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மாணவர் பிரிவான NSUI கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சங்குமுகம் கடற்கரை, டெல்லி, ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் சண்டிகரில் ஆவணப்படத்தின் திரையிடலை முன்னெடுத்திருக்கிறது.
கேரளாவின், மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் கே. ஆண்டனி, "இந்தியாவின் இறையாண்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது இந்த ஆவணப்படம்" எனக் கூறி காங்கிஸ் கட்சியிலிருந்து வெளியேறினார். இதற்கு பதிலளித்த திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான சசி தரூர், "அவரின் வாதம் முதிர்ச்சியற்றது. நமது தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை ஒரு ஆவணப்படத்தால் பாதிக்கப்படும் அளவுக்கு பலவீனமாக உள்ளதா?"எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும், பிபிசி-யின் இந்த ஆவணப்படத்தை தடை செய்வதற்கு எதிரான நிலைப்பாட்டை கேரள ஆளும் சிபிம் எடுத்திருப்பது குறிப்பிடதக்கது. இதற்கிடையில், இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) நேற்று மாலை கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில், ஆவணப்படத்தை திரையிட்டிருக்கிறது.
from Latest News
0 கருத்துகள்