Header Ads Widget

மத்திய பட்ஜெட்: ``இது பட்ஜெட்டா... மளிகை கடை பில் போல இருக்கிறது" - சுப்பிரமணியன் சுவாமி

2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளை பாதுகாக்க எந்த திட்டமும் இல்லை என்றும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை எனவும் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வரிசையில் பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இது பட்ஜெட்டா... மளிகை கடைக்காரரின் பில் போல இருக்கிறது என விமர்சனம் செய்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்," மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது பட்ஜெட்டா? இது மளிகை கடைக்காரர் ஒருவரின் பில். சரியான பட்ஜெட் என்பது நாட்டின் குறிக்கோள்கள் என்ன? என்பதை வெளிப்படுத்த வேண்டும். ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை குறிப்பிட்டால் முதலீட்டின் நிலை என்ன? வருவாய் விகிதம் என்ன என்பதை கூற வேண்டும். மேலும் பொருளாதார வளர்ச்சி, நாட்டின் வளங்களை கையாளும் திட்டம் உள்ளிட்டவற்றை எடுத்து காட்ட வேண்டும்'' எனப் பதிவிட்டிருக்கிறார்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்