Header Ads Widget

``மம்தாவின் ராஜ்யத்துக்கு பாஜக முடிவுகட்டும்!" - ஜே.பி.நட்டா தாக்கு

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸின் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திரிணாமுல் காங்கிரஸையும், மம்தா பானர்ஜியையும் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

ஜே.பி.நட்டா

மேற்கு வங்கத்தில் பிரதமர் ஆவாஸ் யோஜனா-வை செயல்படுத்துவதில் முறைகேடு நடந்ததாகக் குறிப்பிட்ட ஜே.பி.நட்டா, ``இரண்டு, மூன்று மாடிக் கட்டடங்களைக் கொண்டவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வீடுகளைப் பெற்றிருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் இதுதான் நிலை.

இங்கு பெண் முதலமைச்சராக இருந்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ், பயங்கரவாதம், மாஃபியா, ஊழல் ஆகியவற்றின் பக்கம் நிற்கிறது. மேற்கு வங்கத்தில் எல்லா இடங்களிலும் ஊழல் இருக்கிறது.

மம்தா பானர்ஜி

எஸ்.எஸ்.சி ஆட்சேர்ப்பு அல்லது வேறு எந்த வகை பணியமர்த்தலாக இருந்தாலும், அனைத்து வேலைகளும் விற்பனைக்கு இருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் ஸ்தம்பித்துவிட்டது. மம்தா பானர்ஜியின் ராஜ்யத்துக்கு பா.ஜ.க முடிவுகட்டும்" என நேற்று கடுமையாகச் சாடினார்.



from India News https://ift.tt/c8t5B1p
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்