Header Ads Widget

விழுப்புரம்: மர்மமான முறையில் இளைஞர் எரித்துக் கொலையா? - தீவிர விசாரணையில் போலீஸ்!

விழுப்புரம் அருகிலுள்ள விராட்டிகுப்பம் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நேற்று மாலை முதல் இருசக்கர வாகனம் ஒன்று நின்றுகொண்டிருப்பதாக தாலுகா காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி அந்தப் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர், அருகிலுள்ள முட்புதரிலிருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்து சோதனை மேற்கொண்டனர். அங்கு எரிந்த நிலையில் இளைஞரில் உடல் கிடப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். 

மீட்கப்பட்ட உடல்

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற தடயவியல் நிபுணர்கள் அங்கிருந்த தடயங்கள், இறந்தவரின் உபகரணங்களைச் சேகரித்தனர். அதன் தொடர்ச்சியாக, உடலைமீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு கிடைத்த ஆதார் அட்டையை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் பெயர் பெஞ்சமின் என்பதும், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருவந்தி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 

மேலும், சென்னையில் தங்கி உணவு டெலிவரி செய்யும் வேலையை இவர் செய்துவந்ததும் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து சந்தேக மரணம் எனும் பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.

விழுப்புரம் தாலுகா காவல் நிலையம்

இளைஞர் கொலைசெய்யப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்துகொண்டாரா உள்ளிட்ட சந்தேக கோணங்களில் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.



from Latest News

கருத்துரையிடுக

0 கருத்துகள்