காரைக்கால் மாவட்டம் காசகுடிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சப்பன். இவருக்கு சொந்தமான மீன்பிடிப்படகில் காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வீரக்குமார், அர்ஜுனன், விஜேந்திரன், கவி உள்ளிட்ட 11 மீனவர்கள் காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 24-ம் தேதி அதிகாலை மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-02/4ed881b5-70cc-4fa2-b248-dc284d51b4ec/IMG_20230226_WA0009.jpg)
இந்த நிலையில், கோடியகரைக்கு தென்கிழக்கு வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகு சுற்றி வளைத்துள்ளனர். பின்னர் ஐந்துக்கும் மேற்பட்ட இலங்கை கடற்படை சேர்ந்த அதிகாரிகள் படகில் ஏறி மீனவர்களை இரும்பு ராடு, பைப் கொண்டு கண்மூடித்தனமாக கொலை வெறியுடன் தாக்கி உள்ளனர். மேலும் படகில் இருந்த வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி, விலை உயர்ந்த செல்போன்கள், வெள்ளி இடுப்பு செயின் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள மீன்களையும் இலங்கை கடற்படை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-02/f387108e-78c4-490a-b7f7-cc0cb941e996/IMG_20230226_WA0010.jpg)
மேலும் படகில் இருந்த மீனவர்கள் 7 பேரை கடலில் தள்ளி தத்தளிக்க விட்டுள்ளனர் என்றும் குற்றம்சாட்டுகின்றனர். கடலில் தள்ளப்பட்ட மீனவர்கள் இரண்டு மணி நேரம் தத்தளித்து மீண்டும் படகில் எறியதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மீனவர்களின் வலைகளை கடலில் தூக்கி போட்டு சென்றுள்ளனர். பின்னர் காரைக்கால் துறைமுகத்தில் கரை திரும்பிய மீனவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் முதலுதவி பெற்று சொந்த ஊரான கீழ காசகுடிமேடு மற்றும் மயிலாடுதுறைக்கு சென்றுள்ளனர். இலங்கை கடற்படை மீனவர்களை தாக்கிய சம்பவம் காரைக்கால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படைக்கு காரைக்கால் மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு உரிய தீர்வினை அளிக்குமாறு மீனவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
from India News https://ift.tt/hRdQfpP
via IFTTT
0 கருத்துகள்