Header Ads Widget

Tamil News Today Live : கோயில் கிணறு சுவர் இடிந்து 35 பேர் பலி! - மபி-யில் சோகம்

கோயில் கிணறு சுவர் இடிந்து 35 பேர் பலி! - மபி-யில் சோகம்

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் படேல் நகரில் பழைமையான கோயில் ஒன்று அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று இருக்கிறது. அந்தக் கிணறு சிமென்ட் சிலாப் கொண்டு மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ராம நவமியை முன்னிட்டு நேற்றைய தினம் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் கிணற்றின் மேல் நின்று கொண்டிருந்தனர். இந்த நிலையில், பாரம் தாங்காமல், சிமென்ட் சிலாப்பும், கிணற்றின் சுற்றுசுவரும் இடிந்து விழுந்தன. இதில் அதன் மேல் நின்றுகொண்டிருந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கிணற்றில் விழுந்து, இடிபாடுகளில் சிக்கினர். அங்கு மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 35 பேர் இந்த விபத்தில் பலியாகியிருப்பதாகவும், 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.



from India News https://ift.tt/HFpvB8i
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்