Header Ads Widget

Tamil News today live : ராகுல் காந்தி தகுதி நீக்கம்; நாடு தழுவிய சத்தியாகிரகத்தை முன்னெடுக்கும் காங்கிரஸ் கட்சி!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் : நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்தை முன்னெடுக்கும் காங்கிரஸ்!

ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் கட்சி இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, நாடு தழுவிய அளவில் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தவிருக்கிறது.

மல்லிகார்ஜுன கார்கே

அனைத்து மாநிலங்களிலும் காந்தி சிலைக்கு முன்பாகவும், கட்சி அலுவலகங்களிலும் அந்தந்த மாநில நிர்வாகிகள் தலைமையில் இந்த சத்தியாகிரகப் போராட்டம் நடைபெறவிருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கட்சியின் தலைமைச் செயலகத்திலும், பிரியங்கா காந்தி ராஜ் கட் பகுதியிலும் சத்தியாகிரகத்தில் கலந்துகொள்கின்றனர்.



from India News https://ift.tt/SniBZHR
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்