Header Ads Widget

Tamil News today live: பன்னீர் தரப்பு மேல்முறையீடு... எடப்பாடி தரப்பில் கேவியட் மனு!

பன்னீர் தரப்பு மேல்முறையீடு... எடப்பாடி தரப்பில் கேவியட் மனு!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, இந்த வழக்கில் தனது தீர்ப்பை வழங்கினார். அப்போது அவர் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பு வழங்கியதோடு, பன்னீர் தரப்பு வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

இதனிடையே அதிமுக வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். அதாவது தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து நீதிபதிகள் மகாதேவன் முகமது சபீக் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் நீதிமன்றம் எந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.



from India News https://ift.tt/P5TkH8q
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்