பிரதமர் நரேந்திர மோடி நாளை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகைத்தர இருக்கிறார். Project Tiger எனப்படும் புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டதன் 50- வது ஆண்டை முன்னிட்டு சிறந்த புலிகள் காப்பகங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்க இருக்கிறார். நாட்டில் மொத்தமுள்ள புலிகளின் எண்ணிக்கையை அறிவிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும், தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் ரகு, பொம்மி ஆகிய இரண்டு யானை குட்டிகளை பார்வையிட்டு கரும்புகளை வழங்க இருக்கிறார். இந்த குட்டி யானைகளைப் பராமரித்த ஆஸ்கர் புகழ் பாகன்களான பொம்மன், பெள்ளி தம்பதியை சந்தித்து உரையாட இருக்கிறார்.
பிரதமரின் வருகைக்காக ஹெலிபேட் அமைப்பது முதல் சாலை விரிவாக்கம் வரை இரவு பகலாக பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக கேரளா மற்றும் கர்நாடகாவை இணைக்கும் வழித்தடங்களான கக்கநள்ளா, தொரப்பள்ளி சோதனைச் சாவடிகளை இன்று மாலை 4 மணி முதல் நாளை மறுநாள் காலை 10.30 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்தையும் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் சந்திக்க இருப்பதால் பொம்மன், பெள்ளிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் முதுமலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் மசினகுடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
from India News https://ift.tt/MoW8ilw
via IFTTT

0 கருத்துகள்