Header Ads Widget

``இது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம்" - அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் குறித்து சி.வி.சண்முகம்

திமுக-வினரின் ஊழல் மற்றும் சொத்து பட்டியல் ஏப்ரல் 14-ம் தேதி காலை 10.15-க்கு வெளியிடப்படும் என ட்வீட் செய்திருந்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை. இந்த நிலையில், நேற்று காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக-வின் சொத்துப் பட்டியல் என ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இது தொடர்பான முழுத் தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது என்றும் அவர் அறிவித்தார்.

அண்ணாமலை, ஸ்டாலின்

இந்த நிலையில், அம்பேத்கரின் 133-வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம். அதனைத் தொடர்ந்து, நான்குமுனை சந்திப்பு அருகே அ.தி.மு.க கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தி.மு.க-வினுடைய முன்னணித் தலைவர்கள், அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டிருப்பது, ஆயிரக்கணக்கான கோடிகளை சொல்வதென்பது ஒன்று புதிதல்ல. இது எல்லாருக்கும் தெரிந்த ரகசியம். தி.மு.க என்றாலே... கொள்ளையடிப்பது, அரசாங்க சொத்தை அபகரிப்பது, சொத்து சேர்ப்பது. இதுதான் அவர்களுடைய கொள்கை. இதில் ஒன்றும் பெரிய விஷயமே இல்லை" என்றார் சுருக்கமாக



from India News https://ift.tt/q4MxR7y
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்