Header Ads Widget

சவுதி அரேபிய லீகில் ஆடப்போகும் இந்திய வீரர்கள்; என்ன சொல்கிறது பிசிசிஐ ?

கால்பந்து மற்றும் ஃபார்முலா 1 போன்ற விளையாட்டுகளில்  அதிக முதலீடு செய்து தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் சவூதி அரபியா தற்போது கிரிக்கெட் பக்கம் தங்களது கவனத்தை செலுத்தி இருக்கிறது.

சவுதி அரேபியா தற்போது தங்களது நாட்டிலேயே உலகின் பணக்கார டி20 லீக்கை நடத்த திட்டமிட்டிருப்பதாகத்  தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அதற்காக அவர்கள் பிசிசிஐ மற்றும் ஐபிஎல் உரிமையாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

Cricket

பிசிசிஐ-யை பொறுத்தவரை இந்திய வீரர்கள் யாரும் ஐபிஎல் லீக்கை தவிர்த்து மற்ற எந்தவிதமான லீக்குகளிலும் பங்கேற்க கூடாது என்ற தடையை ஏற்கனவே விதித்துள்ளது. ஒருவேளை சவுதி அரேபியா டி 20 லீக்கை தொடங்கினால், அதில் இந்திய வீரர்கள் பங்கேற்பதற்கான அனுமதியை  பிசிசிஐ வழங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர்,"தற்போது இந்திய அணிக்கு விளையாடக்கூடிய கிரிக்கெட் வீரர்களை எந்த ஒரு லீக்கு-க்கும் பிசிசிஐ  அனுமதிப்பதில்லை. ஆனால் ஐ.பி.எல் இல் அணிகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் வேறு லீகிலும் அணிகளை வாங்குவதை பிசிசிஐ-யால் தடுக்க முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட முடிவு" என்று  கூறியிருக்கிறார். 



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்