Header Ads Widget

Tamil News Live Today: ``12 மணி நேர வேலை மசோதாவை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன்” - முதல்வர் ஸ்டாலின்

``12 மணி நேர வேலை மசோதாவை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன்” - முதல்வர் ஸ்டாலின்

தொழிலாளர் தினமான இன்று, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள நினைவுச் சின்னத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச பேரவை சார்பில் மே தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், சிவப்பு நிற உடை அணிந்து வந்து மே தின பூங்காவில் மரியாதை செலுத்தினார். பின்னர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் நடைபெற்றது.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ``திமுக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை மசோதாவை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன். திமுக ஜனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. விட்டுக் கொடுப்பதை என்றும் அவமானமாக நினைக்கவில்லை, அதனை பெருமையாகவே கருதுகிறேன். 12 மணி நேர பணி சட்டத்தை திரும்ப பெற்ற பிறகும் அது குறித்து அவதூறான தகவல்களை பரப்புகின்றனர்” என்றார்.



from India News https://ift.tt/ZsoGC8k
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்