Header Ads Widget

Tamil News Live Today: ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு... செயற்குழுக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விசாரணை!

அதிமுக செயற்குழுக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று வழக்கு விசாரணை!

தமிழக அரசியலில் அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் இன்னும் முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் எடப்பாடி தரப்பில் பொதுச் செயலாளராக பதவியேற்று அடுத்த கட்ட நகர்வுகள் நோக்கி சென்றாலும், பன்னீர் தரப்பில் சட்டப் போராட்டம் தொடர்கிறது. அந்த வகையில் அதிமுக பொது குழு தீர்மானங்களுக்கும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம், அவரின் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்மறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அதிமுக | பன்னீர் - எடப்பாடி

இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பன்னீர் தரப்பு வழக்கறிஞர்கள், ``கட்சியில் தற்போது புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தங்கள் தரப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் உறுப்பினர் விண்ணப்பங்களை புதுப்பிக்கும் போது அவை நிராகரிக்கப்படலாம். எனவே அதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று வாதிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றம்!

எனினும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காத நீதிமன்றம், இடைப்பட்ட காலத்தில் கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதனிடையே வரும் 16-ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என பன்னீர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையிட்ட நீதிபதிகள் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் இன்று விசாரிக்கின்றனர். அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 16-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றைய நீதிமன்ற விசாரணை முக்கியத்துவம் பெறுகிறது.



from India News https://ift.tt/QX2ItGy
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்