டெல்லியில் அமித் ஷா, நட்டாவைச் சந்தித்த இபிஎஸ் - தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை!
டெல்லிக்குச் சென்றிருந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்றிரவு சுமார் 9 மணியளவில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கர்நாடக தேர்தல், பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் குறித்தும் அங்கு பேசப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின்போது எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, தம்பிதுரை, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தனர். பா.ஜ.க மாநிலத் அண்ணமாலையும் இந்தச் சந்திப்பின்!போது அங்கு இருந்தார்.
from India News https://ift.tt/gms62lX
via IFTTT
0 கருத்துகள்