Header Ads Widget

Tamil News Live Today: அருணாச்சல பிரதேச எல்லை விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு!

அருணாச்சல பிரதேச விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு!

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளை தெற்கு திபெத் என்று சீனா அவ்வப்போது சொந்தம் கொண்டாடி வருகிறது. இது இந்திய சீன எல்லைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளை உரிமை கோரும் முயற்சியாக, அங்குள்ள 11 இடங்களுக்கு சீனா புதிய பெயர்களை சூட்டியது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, `இத்தகைய செயல்களை திட்டவட்டமாக நிராகரிப்பதாகவும், அருணாச்சல பிரதேசம் முழுவதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’ என்றும் பதில் கூறியது.

இந்தியா - சீனா

இந்த நிலையில் இது விவகாரத்தில் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர், பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ``அமெரிக்கா அருணாசலப் பிரதேசத்தை நீண்ட காலமாக இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்துள்ளது. ஒரு சில பகுதிகளை பெயரிடுவதன் மூலம் பிராந்திய உரிமை கோரர்களை முன்னெடுப்பதற்கான எந்த ஒரு தலை பட்ச முயற்சிகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்” என சீனாவுக்கு கண்டனத்தை பதிவு செய்தார்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்