புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால் ஆஜராக சிபிஐ சம்மன்!
டெல்லியில் மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பதியப்பட்ட வழக்கில், மாநில துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வழக்கில் மனீஷ் சிசோடியா தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் புதிய மதுபான கொள்கை முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
from Latest news

0 கருத்துகள்