ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்கு பேட்டையைச் சேர்ந்தவர் சண்முகராஜா. இவரின் மகன் பிரவீன் (14). கொடிவேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், வடக்கு பேட்டை பகுதியில் உள்ள தந்தையின் மளிகைக் கடைக்குச் சென்று அவருக்கு பிரவீன் உதவி செய்து வந்தார்.
வழக்கம்போல் திங்கள்கிழமை காலை பிரவீன் மளிகைக் கடையை திறந்துள்ளார். அப்போது, மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இது தெரியாத பிரவீன் ஷட்டரை தூக்கியபோது மின்சாரம் தாக்கி அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மாணவர் பிரவீனை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவர் பிரவீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Latest news

0 கருத்துகள்