Header Ads Widget

கலிபோர்னியாவில் `சாதி' பாகுபாட்டுக்குத் தடை | கென்யாவில் கொல்லப்பட்ட ஆண் சிங்கம் - உலகச் செய்திகள்

துருக்கியில் அதிபர் தேர்தலில் போட்டியிடவிருந்த முஹர்ரம் இன்ஸ் (Muharrem Ince), தற்போது தேர்தலிலிருந்து பின் வாங்கியிருக்கிறார். பிறகட்சியைச் சேர்ந்தவர்கள், அவர் ஒரு பெண்ணுடன் சந்தித்ததைத் தவறாகச் சித்தரித்த நிலையில், அவர் இந்த முடிவை அறிவித்தாக கூறப்படுகிறது.

ஆசியன் (ASEAN) நாடுகளின் சந்திப்பு ப்ளோர்ஸ் தீவில் நிறைவடைந்த நிலையில், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ (Joko Widodo), மியான்மாரில் அமைதியை நிலைநாட்டுவதில் எந்த முன்னேற்றமும் கொண்டுவரப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் வர்த்தகதுறை அமைச்சர் சீனாவுக்குப் பயணம் செய்தார். சீனா - ஆஸ்திரேலியாவின் உறவுகளை சரிசெய்வதற்கான கூட்டு முயற்சியின், ஒரு பகுதியாக இந்தப் பயணம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

காசாவில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். பிரான்ஸ், ஜெர்மனி, ஜார்டன், எகிப்து ஆகிய நாடுகள் இந்த வன்முறையை உடனடியாக நிறுத்த வலியுறுத்தினர்.

லிண்டா யக்காரினோ ட்விட்டரின் அடுத்த சிஇஓ -வாக செயல்படுவார் என்று எலான் மஸ்க் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். லின்டா யக்காரினோ பிஸினஸ் செயல்பாடுகளைப் பார்த்துக் கொள்வார் என்றும், தொழில்நுட்ப ரீதியான செயல்பாடுகளை எலான் மஸ்க் கண்காணித்துக் கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.

போர்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகின் வயதான நாய் போபி , அதன் 31-ம் வயதைக் கொண்டாடியது. உலகின் வயதான நாய் என்ற கின்னஸ் சாதனையையும் இந்த நாய் படைத்திருக்கிறது.

பாப் பாடகரான Dolly Parton புகழ்பெற்ற ஏசிஎம் விருது வழங்கும் விழாவில், அவரின் நண்பர்களான Loretta Lynn, Naomi Judd ஆகிய இருவரையும் நினைவு கூர்ந்து மேடையில் மரியாதை செய்தார். இருவரும் 2022-யில் முதிர்ச்சியின் காரணமாகக் காலமானார்கள்.

'தி வாய்ஸ்' நிகழ்ச்சியின் 23 -வது சீசனின் இறுதி எபிசோடில் புகழ்பெற்ற பாடகர்கள் Adam Levine மற்றும் இசைக்குழு Maroon 5-யின் கலைநிகழ்ச்சி இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சாதி அடிப்படையில் பாகுபாடு பார்ப்பதை தடை செய்வதற்கான புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

Loonkiito என்ற 19 வயது ஆண் காட்டுச் சிங்கம் கென்யாவில் கொல்லப்பட்டது. இது ஆப்ரிக்காவின் வயதான ஆண் சிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்