கர்நாடகா சட்டமன்ற தேர்தல் - முன்னணி நிலவரம்
காங்கிரஸ் பாஜக இடையே கடும் போட்டி!
கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கமே இரு கட்சிகள் இடையே கடும் போட்டி இருக்கிறது என்பதை காட்டுகிறது. தற்போதைய நிலபரப்படி, பாஜக - 21, காங்கிரஸ் 18, மஜத 5 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.
``பாஜக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை அமைக்கும்” - பசவராஜ் பொம்மை
``கர்நாடகாவுக்கு இன்று மக்கள் அளித்த தீர்ப்பு வெளியாகவுள்ளதால், அந்த மாநிலத்திற்கு மிக முக்கியமான நாள். பாஜக அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று நிலையான ஆட்சியை அமைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
முட்டி மோதும் பாஜக - காங்கிரஸ்!
கர்நாடகா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, பாஜக 7 இடங்களிலும் காங்கிரஸ் 4 இடங்களிலும், மஜத 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தற்போது தொடங்கி இருக்கிறது.
தேர்தலில் பதிவான வாக்குகள் 36 மையங்களில் எண்ணப்படுகின்றன. முதலில் வீட்டில் இருந்தே வாக்களித்த முதவர்களின் வாக்குகள் எண்ணப்படும். அதன் பின்னர் தபால் வாக்குகள் எண்ணப்படும். இந்த தேர்தலில் ஆளும் பாஜக 224 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
``கூட்டணிக்காக யாரும் தொடர்பு கொள்ளவில்லை” - குமாரசாமி
கர்நாடக தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ஜே.டி.எஸ் தலைவர் குமாரசாமி, ``இன்னும் 2-3 மணி நேரத்தில் எல்லாம் தெளிவாகிவிடும். இரு தேசியக் கட்சிகளும் அமோக வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. கருத்துக்கணிப்பு JD(S) க்கு 30-32 இடங்களை அளித்துள்ளது. நான் ஒரு சிறிய கட்சி, எனக்கு எந்த தேவையும் இல்லை... நல்ல வளர்ச்சியை எதிர்பார்க்கிறேன்” என்றார்.

கூட்டணி ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த குமாரசாமி, ``இதுவரை யாரும், எந்த கட்சியும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. எனக்கு எந்த கோரிக்கையும் இல்லை, எங்களுடையது ஒரு சிறிய கட்சி" என முடித்துக்கொண்டார். முன்னதாக எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் கட்சியுடன் கூட்டணி என குமாரசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தென் இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 73.19% வாக்குகள் பதிவாயின.
இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜக 224 தொகுதிகளிலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 223 இடங்களிலும் போட்டியிட்டுள்ளன. கர்நாடக தேர்தலை பொறுத்த வரையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வெல்லும் இடங்களும் முக்கியம். அந்த வகையில் அக்கட்சியானது 207 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கணிசமான இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. அரசியல் கட்சிகளை தவிர, 918 சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர். ஒட்டு மொத்தமாக 2613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை
தேசிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு, கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய பிரதான கட்சிகள் களத்தில் மோதுகின்றன. மும்முனைப் போட்டியாக இருந்தாலும், பா.ஜ.க-காங்கிரஸ் இடையேயான மோதல்தான் பெருமளவில் பேசப்பட்டுவருகிறது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்பட இருக்கிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை அறிய கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் லிங்கை க்ளிக் செய்யவும்...
from Latest news

0 கருத்துகள்