ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!
தமிழகத்தில் போதைப்பொருள்கள் புழக்கம், சட்டம்-ஒழங்கு பிரச்னை, மின்வெட்டு, கள்ளச்சாராய/ விஷச்சாராய மரணங்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் முறைகேடு உள்ளிட்டவை தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் புகார் மனு அளிக்கவுள்ளார்.
இதற்காக, சின்னமலை அருகில் இருந்து காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக-வினர் பேரணியாக புறப்பட்டு ஆளுநர் மாளிகைக்குச் செல்கின்றனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து திமுக அரசு மீது புகார் மனு அளிக்கவுள்ளனர்.
from India News https://ift.tt/xjNIlwR
via IFTTT

0 கருத்துகள்