Header Ads Widget

Tamil News Today Live: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?! - மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முடிவெடுக்கும் அதிகாரம்!

``மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிகாரம்”

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. பாஜக 66, மஜத 19, சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணிகளில் கவனம் செலுத்தியது. இதில் சித்தராமையாவுக்கும் டி.கே.சிவகுமாருக்கும் ஏற்பட்ட போட்டி வெளிப்படையாகவே தெரிந்தது. இரு தரப்பு ஆதரவாளர்களும் கோஷம் எழுப்பி கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

கர்நாடகா - காங்கிரஸ்

நேற்று இரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் யார் என்ற முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே டெல்லி விரைந்துள்ளார். அங்கு மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். இதனை தொடர்ந்து டி.கே.சிவகுமார், சித்தராமையா ஆகியோரும் டெல்லி சென்று காங்கிரஸ் மேலிடத் தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



from India News https://ift.tt/swzR56Y
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்