Header Ads Widget

சநதல பலஜ தவற சயயவலல என மதலவரல கற மடயம?" - வனத சனவசன களவ

கோவையில்  செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, “அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உடல் நிலை காரணமாக செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கிறார். இந்த கைதுக்கு திமுக கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து கண்டன அறிக்கை விடுவது, கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு இதற்கெல்லாம் பாஜகவை, பிரதமரை காரணம் என்கிற ரீதியில் மக்கள் முன்பு தவறான கருத்துகளை பரப்புகிறார்கள்.

வானதி சீனிவாசன்

மாநிலத்தின் முதல்வர், ‘எங்களை யாரும் மிரட்டி பார்க்க முடியாது. பணிய வைக்க முடியாது.’ எனக் கூறி வருகிறார். அவர் மத்திய பாஜக அரசை சொல்கிறாரா?. இல்லை தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தை கூறுகிறாரா? என புரியவில்லை.

செந்தில் பாலாஜியை துன்புறுத்துகிறார்கள் என்று கூறும் இவர்கள் அவர் தவறு செய்யவில்லை என கூறியிருக்கிறீர்களா?. செந்தில் பாலாஜி குற்றமற்றவர், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் எந்தத் தவறும் செய்யவில்லை என்று முதலமைச்சரால் சொல்ல முடியுமா?. சினிமாவில் வருவதைப் போல் இதற்கு முன்பாக நீங்கள் பேசியதை வைத்து பார்க்கும்போது, இதெல்லாம் நீங்கள் தானா என்று கேட்பது போல் உள்ளது.

செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறை விசாரணை என்பது உச்ச நீதிமன்றத்தால் அறிவுறுத்தப்பட்டு அதன்படி நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட நபர் மற்றும் மாநில அரசின் கடமை. ஆனால் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒரே மேடையில்  நிற்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று கூறி மக்களை திசை திருப்புவதற்காக நாடகத்தை எல்லாம் நடத்த வேண்டாம்.

பாஜக சமீப காலமாக ஊழல்களை பட்டியலிட்டு வருகிறோம். அப்போதெல்லாம் ஆதாரம் கேட்ட செந்தில் பாலாஜி, தற்போது ஆதாரத்தை காண்பித்தப் பிறகு அய்யய்யோ துன்புறுத்துகிறார்கள்.. மிரட்டுகிறார்கள் என கூறுகிறார். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற மனபாங்கில் இருந்து முதலமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் வெளியில் வர வேண்டும்.

ஸ்டாலின்

குற்றம் செய்பவர்களின் மாமன், மச்சான், மாப்பிள்ளை யாராக இருந்தாலும் சட்டப்படி அவர்கள் அதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். செந்தில் பாலாஜி முதல்வர் குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறார். முதல்வரின் மனதிற்குள் போய்விட்டார். முதல்வரையே திட்டியவர் எப்படி அவரது மனதிற்குள் சென்று விட்டார் என்பதை அவரிடம் கேட்டுத்தான் சொல்ல வேண்டும்.” என்றார்.



from India News https://ift.tt/pzO5wm7
via IFTTT

கருத்துரையிடுக

0 கருத்துகள்