ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணி! - ஸ்டெர்லைட் நிர்வாகம் வைத்த கோரிக்கைகள் நிராகரிப்பு!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே செய்ய உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கழிவு அகற்றும் பணிகளுக்கான செலவை ஸ்டெர்லைட் நிர்வாகம் ஏற்க வேண்டும் என்றும் இதற்காக துணை ஆட்சியர் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயலற்ற இயந்திரங்களை அகற்ற, மூலப்பொருட்கள், உதிரிபாகங்களை ஆலைக்கு வெளியே கொண்டு செல்ல ஸ்டெர்லைட் நிர்வாகம் வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
8வது நாளாக தொடரும் ரெய்டு!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் 8வது நாளாக இன்றும் வருமான வரித்துறையின் ரெய்டு நடைபெற்று வருகிறது.
from India News https://ift.tt/OZiHzyI
via IFTTT

0 கருத்துகள்