அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைப்பு?!
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-06/fed38ec5-e2cb-4049-a3c9-66c0f96bcb82/WhatsApp_Image_2023_06_29_at_19_45_40.jpeg)
அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி நீக்கம் பற்றி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க முடிவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தனது முடிவை நிறுத்தி வைத்தது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் ஆளுநர் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
``அமைச்சரை டிஸ்மிஸ் செய்வதாகச் சொன்ன உத்தரவை ஆளுநர் திரும்பப் பெற்றுவிட்டாராம்!!! அடக்கொடுமையே!” என ரவிக்குமார் எம்.பி விமர்சித்திருக்கிறார்.
from India News https://ift.tt/vJHDmbk
via IFTTT
0 கருத்துகள்