ஒடிசா விபத்து; சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வந்தடைந்த 137 தமிழகப் பயணிகள்!

ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான கோர சம்பவத்தில், இதுவரை 290 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சுமார் 400 பேர் வரை தொடர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழக அரசின் ஏற்பாட்டின்பேரில், ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த தமிழகப் பயணிகள் 137 பேர் இன்று அதிகாலை சிறப்பு ரயில் மூலம் சென்னைக்கு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் வரவேற்று, நலம் விசாரித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர், ``ஒடிசாவிலிருந்து ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு சிறப்பு ரயில் சென்னைக்கு வந்து சேரும் என்று அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, அதற்கேற்ற வகையில் முன்னேற்பாடுகளைச் செய்தோம்.



இங்கே அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் படுக்கைகளையும், சிகிச்சையளிக்க மருத்துவர்களையும் தயார் செய்தோம். அதன்படி சிறப்பு ரயில் தற்போதுதான் வந்து சேர்ந்தது. இந்த ரயிலில் வந்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கை 137. இதில் குறிப்பாக 8 பேர் காயமடைந்து வந்திருக்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த ரயில் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இறந்ததாக எந்தத் தகவலும் இல்லை" என்றார்.
from India News https://ift.tt/CpiLA2W
via IFTTT

0 கருத்துகள்