Header Ads Widget

அழுக்காக இருந்த பாஸ்போர்ட்... 82,000 ரூபாய் அபராதம் விதித்த விமானநிலைய அதிகாரிகள்!

ஆஸ்திரேலியாவில் இருந்து பாலிக்குச் சுற்றுலா சென்ற மோனியூ சதர்லாந்து என்ற பெண்ணின் பாஸ்போர்ட் மிகவும் அழுக்காக இருப்பதாகக் கூறி அவருக்கு விமான நிலைய அதிகாரிகள் 82,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Passport (Representational Image)

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மோனியூ சதர்லாந்து, தன்னுடைய 60 வயதான அம்மாவுடன் விடுமுறையை பாலி பகுதியில் கழிக்கத் திட்டமிட்டுள்ளார். விமான நிலையத்தின் கவுண்டரில் இருந்த சமயத்தில், அங்கிருந்த விமான ஊழியர் அவர்களைத் தனியாக அழைத்து வந்துள்ளனர். அவர்கள் இருவரையும் விசாரணை அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கு காரணம் அவர்களின் பாஸ்போர்ட் மிகவும் அழுக்காக இருந்ததாக கூறியுள்ளனர்.

``சமீபத்தில் தான் எனக்கு வேலை இல்லாமல் போனது. என்னால் 1000 அமெரிக்க டாலர்களைத் தர முடியாது என்று கூறினேன். அவர்கள் என்னுடைய அம்மாவின் பயத்தைப் பயன்படுத்தி, பணம் செலுத்தவில்லையெனில், பாஸ்போர்ட் திரும்பக் கிடைக்காது என அவர்களைச் பயமுறுத்தி பணம் செலுத்த வைத்தனர். 

Representational Image

பணத்தை கொடுத்த பின்னர்தான், எங்களுடைய பயணத்தை எந்தவித தடையும் இன்றி தொடர முடிந்தது. ஆனால் இது எனக்கு மிகவும் மோசமான அனுபவமாக இருந்தது. அச்சுறுத்தும் வகையில் நினைவுகள் இருந்தது. என்னுடைய பாஸ்போர்ட் பிரச்னை இல்லை. 7 ஆண்டுகளான பழைய பாஸ்போர்ட் என்பதால், சிறிது அழுக்காக இருந்தது. இப்படி அனுபவம் இல்லாதவர்களை ஏமாற்றி பணம் பெற்றிருக்கிறார்கள்’’ என அப்பெண் குற்றம் சாட்டியுள்ளார். 



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்