Header Ads Widget

மகன் இறந்த ஆத்திரம்: இறுதி சடங்கில் விபரீதம்; 9 குழந்தைகள் உட்பட 13 பேரைக் கொலை செய்த தந்தை!

காங்கோ நாட்டின் இடூரி மாகாணத்தின் நயகோவா கிராமத்தைச் சேர்ந்தவர் முகுவா. இவர் காங்கோ கடற்படையில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு முகுவா-வின் குழந்தை நோயால் உயிரிழந்ததாக தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது. உடனே வீடு திரும்பிய முகுவா, வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. மகன் இறந்த ஆத்திரத்தில் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் மகனின் இறுதி சடங்குக்கு வந்தவர்கள் மீது சாரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

துப்பாக்கி சூடு

இது குறித்து இடூரி மாகாண காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து நயகோவா கிராமத்தின் தலைவர் ஆஸ்கார் பராக்கா,"மகன் இறந்த துக்கத்தில் இருந்த முகுவா நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு என்னக் காரணம் எனத் தெரியவில்லை. காவல்துறையின் விசாரணைக்குப் பிறகே முழுத் தகவல் வெளியாகும். இந்த சம்பவம் நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால், கிராமமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது" எனத் தெரிவித்தார்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்