Header Ads Widget

Alia Bhatt: "கணவன், மகள் என எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. அதனால்..."- மனம் திறந்த ஆலியா பட்

பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’.

இப்படத்தை கரண் ஜோஹர் இயக்கியுள்ளார். ஆலியா பட்டிற்கு ஜோடியாக ரன்வீர் சிங் நடித்துள்ளார். வியாகாம் 18, தர்மா புரொடக்‌ஷன் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றனர். ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் ஆலியா பட் பல நேர்காணல்களில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் அவரது கரியர் தொடர்பான சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். 

ஆலியா பட் | Alia Bhatt

இதுதொடர்பாக பேசிய அவர், “கடந்த 10 வருடங்களில் எனது கரியரில் அதிக கவனம் செலுத்தியதால் நான் என் பெற்றோர்களுடனோ, நண்பர்களுடனோ, சகோதரியுடனோ அதிக நேரத்தைச் செலவிடவில்லை. அப்போது தூக்கமின்மை, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடாமல் இருப்பது போன்ற எல்லா வகையான தியாகங்களையும் நடிப்பிற்காகச் செய்ய நான் தயாராக இருந்தேன். ஆனால் தற்போது கணவன், மகள் என எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. அதனால் முன்பு போலப் பல தியாகங்களைச் செய்ய முடிவதில்லை. இருப்பினும் குடும்பம், கரியர் என்று இரண்டையும் சரியாகச் சமன்செய்து வருகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்