Header Ads Widget

Kanguva Glimpse: `கங்கா, கங்கா, கங்குவா...' சூர்யாவின் பிறந்தநாளுக்கு வெளியான சிறப்பு டீசர்!

`சிறுத்தை', `வீரம்', `விஸ்வாசம்' போன்ற திரைப்படங்களை எடுத்த சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் `கங்குவா'.

இப்படம் சூர்யாவின் மற்ற படங்களைவிட அதிக பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக பத்து மொழிகளில் தயாராகி வருகிறது. இதன் பீரியட் போர்ஷன் காட்சிகள் முழுவதையும் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதியில் எடுத்து வருகின்றனர். சூர்யாவின் வித்தியாசத் தோற்றத்திற்கான மேக்கப் போடுவதற்கு மட்டுமே தினமும் இரண்டரை மணி நேரம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

கங்குவா

இதற்கிடையில் சூர்யாவின் பிறந்த நாளுக்கு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகும் என்ற அறிவிப்புடன் சூர்யா கைகளில் தழும்புகளுடன் வாளேந்திய படி இருக்கும் போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டிருந்தது. இதையடுத்து கிளிம்ப்ஸ் வீடியோவை உருவாக்குவதற்காக சில வாரங்களுக்கு முன்னர் சென்னை ஈவிபி ஃபிலிம்சிட்டியில் பீரியட் காலகட்டத்துக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டுப் படப்பிடிப்பு நடந்தது. இதில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஜிம்பாய்ஸ் பங்கேற்றனர்.

படப்பிடிப்பு இரண்டு நாள்கள் நடைபெற்றது என்றாலும் அதன் கிராபிக்ஸ் வேலைகளுக்கு சில வாரங்கள் பிடித்தன. இந்நிலையில் தற்போது சூர்யாவின் பிறந்த நாளான இன்று 'கங்குவா' படத்தின் பிரமாண்டமான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு. அதில் சூர்யா பலருடன் போரிட்டு அவர்களை வீழ்த்துவது போன்றும், பெரும் படைக்கு நடுவே நின்று கத்துவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்