Header Ads Widget

பெண்ணின் தந்தையைப் பாம்பை கடிக்கவிட்டுக் கொல்ல முயன்ற இளைஞர்; கேரளாவில் மீண்டுமொரு அதிர்ச்சி சம்பவம்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் காட்டாக்கடை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்ற ராஜூ. இவரின் மகளுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த குண்டு ராவ் என அழைக்கப்படும் கிச்சு (30) தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இது குறித்து மகள் கூறியதையடுத்து, கிச்சுவிடம் நியாயம் கேட்டு `இனி தொல்லை கொடுக்கக் கூடாது' எனக் கூறியிருக்கிறார் ராஜூ. இதனால் கிச்சு ஆத்திரமடைந்து ராஜூவைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறார். அதற்காக நேற்று முன்தினம் அதிகாலை ராஜூவின் வீட்டுக்கு பைக்கில் சென்றிருக்கிறார் கிச்சு. பின்னர் ஜன்னல் வழியாக பாம்பு ஒன்றை ராஜூவின் அறைக்குள் வீசியிருக்கிறார். ஏதோ சத்தம் கேட்டதால், வீட்டில் இருந்தவர்கள் எழுந்து பார்த்திருக்கின்றனர். அப்போது பாம்பு வீட்டுக்குள் வீசப்பட்டதைப் பார்த்து, அதை அடித்துக் கொன்றிருக்கின்றனர். பின்னர் கிச்சுவைப் பிடிக்க முயன்றிருக்கின்றனர். அதற்குள் அவர் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.

பாம்பு

பைக் நம்பரைப் பார்த்த ராஜூவின் வீட்டார், நடந்த சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளித்தனர். பைக்கை துருப்புச்சீட்டாக வைத்து விசாரணை நடத்திய போலீஸார், கிச்சுவைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரித்ததில், ராஜூ வீட்டுக்குள் பாம்பு வீசியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். இதையடுத்து அடித்துக் கொல்லப்பட்ட பாம்பை மீட்ட போலீஸார், அது குறித்து பரிசோதிக்க கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றனர். கொலை முயற்சி வழக்கில் கிச்சு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாம்பை வீட்டுக்குள் விட்டதாக கைதுசெய்யப்பட்ட கிச்சு

கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா என்ற இளம்பெண்ணை, அவரின் கணவர் பாம்பைக் கடிக்க வைத்து கொலைசெய்த சம்பவம், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், மகளைத் தொல்லை செய்தது குறித்து தட்டிக்கேட்டவரை பாம்பைக் கடிக்க வைத்து கொலைசெய்ய முயன்ற சம்பவம், கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs



from Latest news

கருத்துரையிடுக

0 கருத்துகள்