டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு கொண்டு வந்த கலால் வரிக் கொள்கையை உருவாக்குவதில் பிரிண்ட்கோ சேல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அமந்தீப் சிங் தால், கலால் கொள்கை வழக்கில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ் அமலாக்க இயக்குநரகத்தால் (ED) கடந்த மார்ச் 1-ம் தேதி கைது செய்யப்பட்டார் . பின்னர், ஏப்ரல் மாதம், இதே வழக்கில் சிபிஐ கைது செய்தது.
இந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து தங்கள் பெயரை நீக்குவதற்காக அமந்தீப் தால் மற்றும் அவரது தந்தை பிரேந்தர் பால் சிங் ஆகியோர் பட்டய கணக்காளர் பிரவீன்குமார் வாட்ஸ் என்பவருக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது. மேலும், 2022 டிசம்பரில், வசந்த் விஹாரில் உள்ள ஐடிசி ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள வாகன நிறுத்துமிடத்தில், கலால் வரிக் கொள்கை தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து அமந்தீப் தாலின் பெயரை நீக்கியதற்காக, உதவி இயக்குநர் பவன் காத்ரிக்கு முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுத்ததாக பிரவீன் குமார் வாட்ஸ் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக, அமலாக்கத்துறையின் துணை இயக்குநர் ஏர் இந்தியாவின் உதவி பொது மேலாளர் தீபக் சங்வான், கிளாரிட்ஜஸ் ஹோட்டலின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரமாதித்யா, நிதேஷ் கோஹர் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, இந்த வழக்கை சிபிஐ-க்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சிபிஐ குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY
from Latest news

0 கருத்துகள்