``மணிப்பூர் குறித்துதான் பிரதமர் மோடி பேசிவிட்டாரே! எதிர்க்கட்சிகள் வைத்த மற்ற விமர்சனங்களுக்கு அவர் பதில் கொடுக்காமல் இருக்க முடியுமா?”
``குக்கி பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு இழுத்துச் செல்லப்பட்ட நிகழ்வு மே 4-ம் தேதி நடந்திருக்கிறது. 18-ம் தேதி வழக்குப் பதியப்பட்டிருக்கிறது. 22-ம் உள்துறை அமைச்சர் மணிப்பூர் செல்கிறார். அந்த நிகழ்வு அவரது கவனத்திற்கு வந்ததா? இல்லையா? தெரிந்தும் மறைத்துவிட்டரா? தெரியவில்லை என்றாலும் புலனாய்வு பிரிவின் தோல்விதானே! வன்முறையை கட்டுப்படுத்தப்படுத்த ராணுவத்தை அனுப்பாதது ஏன்? ஆயுதங்கள் திருடுபோனது எப்படி? இதற்கெல்லாம் பதில் கேட்டால் நேரு, பாகிஸ்தான் என சம்மந்தமே இல்லாத பதில்களை பிரதமர் சொல்கிறார். அதனால்தான் ஒன்றரை மணி நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, பின்னர் நாங்கள் வெளிநடப்பு செய்ய வேண்டியதாயிற்று.”
“குக்கி பெண்கள் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோவை திட்டமிட்டு நாடாளுமன்றத் தொடருக்கு முன்பு எதிர்க்கட்சிகள் வெளியிட்டாதாக பா.ஜ.க குற்றம்சாட்டுகிறதே?”
“இணைய சேவையை பா.ஜ.க அரசுதானே துண்டித்து வைத்திருந்தது? பிறகு எப்படி உடனடியாக வீடியோ வெளியாகியிருக்க முடியும்? இதுபோல பல சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று அம்மாநில முதல்வர்தானே சொன்னார்? அவர்கள்தான் மறைக்க முயன்றிருக்கிறார்கள். எனவே அந்த வீடியோ வெளியிடப்பட்டு அரசியல் ஆக்கப்பட்டிருந்தாலும் தவறில்லை. ஒருவேளை வீடியோ வெளியாகாமல் போயிருந்தால் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்றே உலக நாடுகளுக்கு தெரியாமல் போயிருக்கும்.”
``மணிப்பூர் விவகாரத்துக்கு மத்தியில், பல மசோதாக்களை சத்தமில்லாமல் நிறைவேற்றிவிட்டார்களே!”
“ஆமாம். 3 மணி நேரம், 4 மணி நேரம் விவாதம் நடக்க வேண்டிய மசோதாக்களை கூட, எந்த விவாதமும் இல்லாமல் 10 நிமிடங்களுக்குள் நிறைவேற்றிவிட்டார்கள். நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது வேறு எதையும் எடுக்கக்கூடாது என்பது மரபு. ஆனால் மீறுகிறார்கள். தண்டனை சட்ட மசோதா ஒருநாளுக்கு முன்புதான் அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யப்போகிற நேரத்தை அறிந்து அறிமுகப்படுத்தினார்கள். தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்த்தோம். ஆனால் அவர்களுக்கு பெரும்பான்மை இருப்பதால் நிறைவேறி விடுகிறார்கள்.”
“விவசாயிகள் போராடி 3 வேளாண் சட்டங்களை நிறுத்திவைத்தார்கள். அதுபோல எதிர்க்கட்சிகளால் நெருக்கடி கொடுக்க முடியவில்லையே?”
“வேளாண் சட்டங்களுக்கு எதிராக கட்சிகளும் போராடின. சென்னையில் தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்தியது. டெல்லி அதிகார குறைப்பு மசோதாவை அ.தி.மு.க, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகள் மாநிலங்களவையில் ஆதரிக்காமல் இருந்திருந்தால் நிறைவேறியிருக்காது. ஆனால் அந்த கட்சிகளையெல்லாம் பா.ஜ.க கையில் வைத்திருக்கிறது. நாங்கள் ஜனநாயக ரீதியாக எதிர்க்கிறோம். நிலைக்குழுவுக்கு அனுப்பச் சொல்லி கேட்கிறோம். ஆனால் அவர்கள் எதிர்க்கட்சிகளின் குரலை மதிப்பதில்லை. மரபை மீறுகிறார்கள். இப்போது நடக்கும் சீர்கேடுகள் எல்லாம் ஆட்சி மாறும்போது சரியாகும்.”
“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் தருமபுரியில் போட்டியிடுவீர்களா?”
“(சிரிக்கிறார்...) தி.மு.க என்பது மிகப்பெரிய ஜனநாயக கட்சி. விருப்ப மனு கொடுக்க வேண்டும், அதை தலைமை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்... அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. இப்போது என்னுடைய பணியை மகிழ்ச்சியோடு செய்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான் சொல்ல முடியும்.”
from Latest news

0 கருத்துகள்